தொலைந்த என்னுடைய கம்மல்

நான் என்னுடைய உபயோகப்படுத்தும் தங்க கம்மலை கழட்டி வைத்து விட்டு சாதாரண கம்மல் ஒரு வாரம் போட்டிருந்தேன்.

அப்போது ஒரு சின்ன பாக்சில் அதை போட்டு வைத்திருந்தேன். அது எப்படியோ தவறி விழுந்து விட்டது. தவறி விழுந்தது தெரியவும் தெரியாது.

ஒருநாள் ஏதேச்சையாக அந்த பெட்டியில் பார்த்தால் ஒரு கம்மல் தான் இருந்தது. மற்றொரு கம்மல் காணவில்லை.

எனக்கு மிகுந்த மன வருத்தம்.

ஏனென்றால் நான் எப்போதும் உபயோகப்படுத்தும் கம்மல் அது. அதுவும் இப்போது எனக்கு பணக் கஷ்டம் நிறைய உள்ளது. இந்த மாதிரி சமயத்தில் எப்போதுமே உபயோகப்படுத்தும் கம்மல் தொலைந்துவிட்டதே என்று மிகவும் கவலைப்பட்டேன்

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்ச் சென்று வந்தேன். சர்ச்சிலும் மனம் முழுக்க கம்மலின் நினைவுதான்.

என் அம்மா அது கிடைக்காது விட்டு விடு என்றார்கள். எனக்கு மனமே வரவில்லை.

வீடு முழுக்க பெருக்கி தேடினேன். கிடைக்கவேயில்லை.

அவ்வளவுதான் என்று நினைத்தேன். சரி குப்பைத் தொட்டியை கொட்டலாம் என்று பின்பக்கம் சென்று கொட்டினேன்

அப்போதும் என் மனம் கேட்காமல் ஒரு குச்சி கொண்டு குப்பையை கிளறினேன்.

முதல் தடவை எதுவும் தெரியவில்லை.

இரண்டாவது தடவையும் தெரியவில்லை. மூன்றாவது முறை என் கம்மல் தெரிந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சந்தோசமாக மற்ற வேலைகள் செய்ய சென்றேன்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

Mary Jose said...

அன்று சாப்பாடு கூட எனக்கு சரிவர இறங்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்...

Mary Jose said...

இப்போது அனைத்து கம்மல்களும் வங்கியில் பத்திரமாக உள்ளன. எனக்கு பணத்தை கடன் தந்து விட்டு...


மகேந்திரன் said...

உங்கள் தளத்திற்கான என் முதல் வருகை சகோதரி...
==
நமக்குப் பிடித்தது தொலைந்து போகையில்
எவ்வளவு வருந்துகிரோமோ
அதனினும் மேலாக அது திரும்ப கிடைக்கையில்
மகிழச்சியாக...

Mary Jose said...

ஆமாம் மகேந்திரன். அது கிடைத்திராவிட்டால் எனது மனது அதை பற்றியே நினைத்து கொண்டிருந்திருக்கும்..

Blog Archive